
கோ.கண்ணன்
தமிழ் நாவல்களில் தலைமுறை இடைவெளி எனும் தலைப்பில் ஆய்வு மேற்கொண்டு தர்மபுரி மாவட்டத்தின் முதல் பார்வையற்ற முனைவராக சிறப்பிக்கப்பட்ட இவர், 'ஓசைகளின் நிறமாலை', 'மழைக்குடை நாட்கள்' போன்ற கவிதை நூல்களை வெளியிட்டுள்ள கவிஞராகவும் தன்னை அடையாளித்துக் கொண்டுள்ளார். தர்மபுரி அரசு கல்லூரியில் தமிழ்த்துறை இணைப் பேராசிரியராக தற்போது பணியாற்றி வருகிறார்.
ஒரு படைப்பாளி தன்னுடலின் ஐம்புலன்களை கூர்மைப்படுத்தி, தான் கண்டடைகிற் நிகழ்வுகளுக்குள் உட்புகுந்து, சிந்தனாவயப்பட்டு, தன்னை பாதிக்கிற நுண்ணிய நிகழ்வுகளையே படைப்பிலக்கியமாக உயிர்ப்பிக்க இயலும் என்கிற காலங்காலமான நியதியை மாற்றியமைத்த படைப்பாளியான இவர், 'ஊனமுற்றோரின் உயரிய சாதனைகள்' நூலிலும் இடம் பெற்ற சாதனையாளர்.
No comments:
Post a Comment